“ சிறப்பாக செயல்படும் மாநிலங்களுக்கு, தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மறுப்பதால் நிதி மறுக்கப்படுகிறது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!

தேசிய கல்வி கொள்கையை ஏற்க மறுப்பதால், சிறப்பாக செயல்படும் மாநிலங்களுக்கு நிதி மறுக்கப்படுகிறது. இதுதான் ஒன்றிய அரசு கல்வியை மேம்படுத்தும் முறையா என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வியெழுப்பியுள்ளார்.

நாடு முழுவதும் தரமான கல்வி, டிஜிட்டல் கல்வி, பள்ளி கட்டமைப்பை வலுப்படுத்துதல், பெண் கல்வி, திறன்மேம்பாடு, விளையாட்டு, கல்வியில் சமநிலை என பள்ளிக்கல்வியை மேம்படுத்தும் நோக்கத்தில் சமக்ர சிக்ஷா அபியான் திட்டம் தொடங்கப்பட்டது.

இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்காக தமிழ்நாட்டிற்கு 2024 – 2025 ஆம் கல்வி ஆண்டுக்காக ரூ.3,586 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்த ஒதுக்கீட்டுத் தொகையில் 60 சதவிகிதத்தை, அதாவது ரூ.2,152 கோடியை ஒன்றிய அரசு வழங்க வேண்டும்.

மீதமுள்ள ரூ.1.434 கோடி தமிழ்நாடு அரசு பங்களிப்புடன் இந்த திட்டம் செயல்படுத்தப்படும். ஒன்றிய அரசு நான்கு தவணைகளாக நிதியை வழங்க வேண்டிய நிலையில், தற்போது வரை நடப்பாண்டுக்கான முதல் தவணை நிதி வழங்கப்படவில்லை.

முதல் தவணைத் தொகையை ஜூன் மாதமே ஒன்றிய அரசு விடுவித்திருக்க வேண்டும். ஆனால் மத்திய தேசிய கல்வி கொள்கையை தமிழ்நாடு அரசு ஏற்க மறுத்ததால் சமக்ர சிக்ஷா அபியான் திட்டத்திற்கான முதல் தவணையான ரூ.573 கோடியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது.

இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், இலக்கை எட்டாத மாநிலங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக முதல்வர் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

இந்துகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “ சிறப்பாக செயல்படும் மாநிலங்களுக்கு, தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மறுப்பதால் நிதி மறுக்கப்படுகிறது.

இலக்கை அடையாத மாநிலங்களுக்கு தாராளமாக நிதி வழங்குகிறது ஒன்றிய அரசு. இதுதான் ஒன்றிய அரசு தரமான கல்வி மற்றும் சமத்துவத்தை மேம்படுத்தும் முறையா? ” என்று கேள்வியெழுப்பியுள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *