இன்று 74வது பிறந்தநாளை கொண்டாடும் பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து 3வது முறையாக இந்தியாவின் பிரதமராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 74வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.
முன்னதாக 4 முறை குஜராத் மாநில முதவராகவும் அவர் பதவி வகித்துள்ளார். தொடர்ந்து அரசியல் களத்தில் கோலோச்சி வரும் பிரதமர் மோடிக்கு , பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப்பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என பலரும் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.