தந்தை பெரியாரின் 146-வது பிறந்தநாளையொட்டி, திமுக எம்.பி., கனிமொழி வாழ்த்து !!

தந்தை பெரியாரின் 146வது பிறந்தநாளையொட்டி, திமுக எம்.பி., கனிமொழி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

செப்டம்பர் 17ம் தேதியான இன்று தந்தை பெரியாரின் 146வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. முன்னதாக கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 6ம்தேதி சட்டசபையில், தந்தை பெரியாரின் ஒவ்வொரு பிறந்தநாளும் “சமூகநீதி நாளாக” கடைபிடிக்கப்படும் என்றும் சமூக நீதி நாளில் “சமூகநீதி நாள் உறுதிமொழியேற்க வேண்டும்” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

அதன்பின்னர் பெரியாரின் ஒவ்வொரு பிறந்தநாளும் “சமூகநீதி நாளாக” கடைபிடிக்கப்படுகிறது.

இந்த நிலையில் பெரியார் பிறந்தநாளையொட்டி திமுக எம்.பி., கனிமொழி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பான அவரது எக்ஸ் தள பதிவில், “It is the duty of every citizen to develop a scientific temper,humanism,and the spirit of inquiry and reform”-Constitution of India
பள்ளிக்கூடங்கள் பகுத்தறிவு கற்றுத்தரட்டும்.


வகுப்பறைகளில் சமத்துவம் ஓங்கட்டும்.


பாடங்களில் பிற்போக்கு ஒழியட்டும்.


மாணவர்களிடம் பெரியார் பேசட்டும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *