தற்போது மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது -வலைத்தளத்தில் நெகிழ்ச்சியோடு வெளியிட்ட சமந்தா!!

தமிழ், தெலுங்கில் அதிக படங்களில் நடித்துள்ள சமந்தா தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து பின்னர் விவாகரத்து பெற்று பிரிந்தார். மயோசிடிஸ் என்ற தசை அழற்சி நோய் பாதிப்பிலும் சிக்கினார்.

இதனால் சினிமாவை விட்டு சில காலம் ஒதுங்கி இருந்தார். வெளிநாடுகளுக்கு சென்று சிகிச்சைகள் பெற்றார். தற்போது உடல் நலம் தேறிய நிலையில் மீண்டும் நடிக்க தொடங்கி இருக்கிறார். வெப் தொடரிலும் நடிக்கிறார்.

ஏற்கனவே சமந்தா நடித்த பேமிலிமேன் 2 வெப் தொடர் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது. சிட்டாடல் வெப் தொடரிலும் நடித்து முடித்துள்ளார். இந்த நிலையில் தும்பத் பட இயக்குனரின் அடுத்த வெப் தொடரிலும் நடிக்கவும் ஒப்பந்தமாகி உள்ளார். இதில் ஆதித்யா ராய் கபூர், வாமிகா கபி ஆகியோரும் நடிக்கின்றனர்.

தற்போது இதன் படப்பிடிப்பில் இணைந்துள்ள சமந்தா வலைத்தளத்தில் நெகிழ்ச்சியோடு வெளியிட்டுள்ள பதிவில், “கொஞ்சம் இடைவெளிக்கு பிறகு மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. கனவு காண்பதை நிறுத்தாதீர்கள்” என்று குறிப்பிட்டு உள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *