செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வென்ற இந்திய அணிக்கு அமைச்சர் உதயநிதி வாழ்த்து!!

ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடைபெற்ற 45 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய அணி தங்கம் வென்று வரலாற்று சாதனை படைத்தது. போட்டி முடிவில் ஆண்கள் அணி 19 புள்ளிகளையும், பெண்கள் அணி 17 புள்ளிகளையும் பெற்று அசத்தியது. செஸ் ஒலிம்பியாட்டில் முதல் முறையாக தங்கம் வென்ற இந்திய அணிக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.

இது குறித்த எக்ஸ் தள பதிவில், “ஹங்கேரியில் இருந்து நம்பமுடியாத செய்தி! 45வது ஃபைடு செஸ் ஒலிம்பியாட் 2024-இல் தங்கம் வென்று இந்திய அணி தனது திறமையை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது.

ஸ்லோவேனியாவுக்கு எதிரான இறுதிச் சுற்றுகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்த வரலாற்று வெற்றியை உறுதி செய்த தமிழகத்தின் பெருமையான குகேஷ் மற்றும் அர்ஜுன் ஆகியோருக்கு சிறப்பு பாராட்டு.”

“ஆர் பிரக்ஞானந்தா, அர்ஜுன் எரிகைசி, விதித் குஜராத்தி, பெண்டலா ஹரிகிருஷ்ணா, மற்றும் கேப்டன் ஸ்ரீநாத் நாராயணன் ஆகிய ஒட்டுமொத்த அணியையும் நினைத்து நாங்கள் பெருமைப்படுகிறோம்.

இந்த சிறப்பான சாதனைக்காக இந்திய அணிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். நீங்கள் ஒட்டுமொத்த தேசத்தையும் பெருமைப்படுத்தியுள்ளீர்கள்!,” என்று குறிப்பிட்டுள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *