ஹார்வர்ட் பல்கலைகழக ஈர்ப்பினால் வடிவமைக்கப்பட்ட ஹுரேகா பாடத்திட்டத்தை கோவையில் அறிமுகப்படுத்திய யூரோகிட்ஸ்…

கோவை,
இந்தியாவின் பாலர் பள்ளி பிரிவில் ஆழ்ந்த நிபுணத்துவமிக்க முன்னணி நிறுவனமான யூரோகிட்ஸ் தனது பாடத்திட்டத்தின் 8-வது பதிப்பான ‘ஹுரேகா’ வை அறிமுகப்படுத்தி இருக்கிறது.

’ஹுரேகா’ பாடத்திட்டத்தின் அறிமுகம் குறித்து, லைட்ஹவுஸ் லேர்னிங் நிறுவனத்தின் ப்ரி-கே பிரிவு (யூரோகிட்ஸ்) தலைமை நிர்வாக அதிகாரி கே.வி.எஸ்.சேஷசாய் கூறுகையில் யூரோ கிட்ஸ், ’’இரண்டு வயதிலிருந்தே ஆர்வத்தையும் பகுத்தறியும் சிந்தனையையும் வளர்த்தெடுப்பதன் மூலம், குழந்தைகள் தங்களது வாழ்நாள் முழுவதும் கற்றுக்கொள்வதற்கான அடித்தளத்தை அமைப்பதில் நாங்கள் நம்பிக்கை கொண்டிருக்கிறோம்.

பாடத்திட்ட மேம்பாட்டு பிரிவின் தலைவர் டாக்டர் அனிதா மதன் குழந்தைப் பருவ பராமரிப்பு மற்றும் கல்வித் துறையில் மிகவும் புதுமையான பாடத்திட்டமாக ஹுரேகாவை வடிவமைத்திருக்கிறார்.

உலகப் புகழ்பெற்ற ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் ’ப்ராஜெக்ட் ஜீரோ’ வினால் ஈர்க்கப்பட்டு இப்பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டிருப்பதோடு, நம் நாட்டின் தேசிய கல்விக் கொள்கை 2020-ன் முழுமையான வளர்ச்சிக்கான தொலைநோக்குப் பார்வையுடன் பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இளம் மாணவர்களின் சாதுரியமிக்க சிந்தனை மற்றும் சிந்தனைப்பூர்வமான படைப்பாற்றல் திறன்களை மேம்படுத்தும் நோக்கத்துடன் ’ஹுரேகா’ பாடத்திட்டம் மிகுந்த அக்கறையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

யூரோகிட்ஸ் நிறுவனத்தின் தொலைநோக்கு பார்வையுடன் கூடிய வளர்ச்சிக்கான உத்திகளின் ஒரு பகுதியாக, பாலர் பள்ளியின் தொடர் செயல்பாடுகளை கோயம்புத்தூர் மற்றும் தமிழ்நாடு முழுவதும் விரிவுபடுத்தும் திட்டத்தையும் அறிவித்திருக்கிறது.

இதன் தொடர்ச்சியாக யூரோகிட்ஸ், அடுத்த 5 ஆண்டுகளுக்குள் தமிழ்நாட்டில் 210 புதிய மையங்களைத் திறக்க திட்டமிட்டுள்ளது.

மேலும், தமிழ்நாட்டில் 300 மையங்களை தொடங்கவும் இலக்கு நிர்ணயித்துள்ளது, இந்த மாபெரும் விரிவாக்க முயற்சியானது, தமிழ்நாட்டில் ஆரம்பக் கல்வியின் தரத்தை மேம்படுத்த உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆரம்பக் கல்வியில் தொடர்ந்து முன்னணி வகித்து வரும் யூரோகிட்ஸ், உயர்தர ஆரம்பக் கல்வியின் அவசியத்தை அடையாளம் கண்டிருக்கிறது.

இதனால் யூரோகிட்ஸ் தனது பாடத்திட்டத்தை சமீபத்திய அம்சங்களுடன் தொடர்ந்து புதுப்பித்து வருகிறது.

ஹுரேகா பாடத்திட்டமானது, குழந்தைகளுக்கு “எதை’ பற்றி சிந்திக்க வேண்டும் என்று வழக்கமாக கற்பிக்கும் முறைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டு “எப்படி” சிந்திக்க வேண்டும் என்பதைக் கற்றுக்கொடுக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இது அவர்களின் திறன்களை வெளிப்படுத்த உதவுவதால், கற்பிக்கும் தளத்தில் மிகப்பெரும் மாற்றத்தை உருவாக்கும்.

மேலும், இந்த பாடத்திட்டமானது ஹார்வர்ட் பல்கலைகழகத்தினால் ஈர்க்கப்பட்டு, அதன் மூலம் மிகவும் நுணுக்கமாக நேர்த்தியுடன் வடிவமைக்கப்பட்ட 20 சிந்திக்கும் வழக்கங்களை அறிமுகப்படுத்துகிறது.

இது குழந்தைகளின் இளம் மனதில் ஆர்வத்தைத் தூண்டுகிறது, கற்பனையை வளர்க்கிறது, எதையும் ஆராய்ந்து அறிந்து முடிவெடுக்கும் சிந்தனையை ஊக்குவிக்கிறது.

இதனால் குழந்தைகள் எந்தவிதமான தகவல்களையும் அப்படியே உள்வாங்கி கொள்ளாமல், அவைக் குறித்த ஆழ்ந்த புரிதல் மற்றும் அவை தொடர்பான படைப்பாற்றலை வெளிக்காட்டும் வகையில் அதில் ஆர்வத்துடன் தங்களது ஆளுமையை வெளிப்படுத்துகிறார்கள்.

இந்த புதிய பாடத்திட்டத்தின் மூலம், கோயம்புத்தூர் மற்றும் தமிழ்நாட்டில் எங்களது செயல்பாடுகளை மேலும் வலுப்படுத்த நாங்கள் ஆர்வமாக உள்ளோம்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *