சென்னை:
புலம்பெயர் தொழிலாளர்களின் பணி நிலைமையை பாதுகாக்கவும்,மேம்படுத்தவும் தொழிலாளர் நலத் துறை சார்பில் குழு ஏற்படுத் தப்பட்டுள்ளது.
மாநில அளவில் புலம்பெயரும் தொழிலாளர்கள் ஆலோசனை குழுக் கூட்டம் சென்னைதேனாம்பேட்டை தொழிலாளர் நலவாரியத்தில் நேற்று நடைபெற்றது.
இந்த கூட்டத்துக்கு தொழிலாளர் ஆணையர் அதுல் ஆனந்த் தலைமை தாங்கினார். கூட்டத்தில், வெளி மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டில் பணிபுரியும் புலம் பெயர்ந்ததொழிலாளர்களின் பணி நிலைமையை பாதுகாக்கவும், மேம்படுத்தவும் குழு ஏற்படுத்தப்பட்டது.
மேலும், தொழிலாளர் துறை இணையதளத்தில் அதிக அளவில் புலம்பெயரும் தொழிலாளர்கள் விவரங்களைப் பதிவு செய்வதற்கும், அவர்களது சட்ட ரீதியானஉரிமைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவும், கட்டுமான தொழிலில் ஈடுபடும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களை தமிழ்நாடு கட்டுமான வாரியத்தில் பதிவு செய்யவும், தமிழ்நாட்டில் பணிபுரிந்து வரும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு இணக்கமான சூழ்நிலை தொடரவும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
அக்.8-ம் தேதி வரை தொழிலாளர் துறை இணையதள வெளிமாநில தொழிலாளர்களுக்கான வலைதளத்தில் 9,36,160 தொழிலாளர்கள் பதிவுசெய்துள்ளனர் என ஆணையர் தெரிவித்தார்.