தன்னலம் கருதாமல் நம் துயர்துடைக்க களம் காணும் தூய்மை பணியாளர்கள், மாநகராட்சி ஊழியர்களுடன் நானும் எப்போதும் முன்கள வீரனாக துணை நிற்பேன் – தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!

தன்னலம் கருதாமல் நம் துயர்துடைக்க களம் காணும் தூய்மை பணியாளர்கள், மாநகராட்சி ஊழியர்களுடன் நானும் எப்போதும் முன்கள வீரனாக துணை நிற்பேன் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நேற்றிரவு விட்டுவிட்டு மழை பெய்த நிலையில் காலை முதல் தொடர்ந்து மழை கொட்டித்தீர்த்து வருகிறது. அதுவும் காற்று இல்லாமல் பலத்த இடி, மின்னலுடன் சன்னாமாக மழை வெளுத்து வாங்கி வருகிறது. தொடர் மழையால் சென்னையின் 20 சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமங்களுக்கு ஆளாகியுள்ளனர்.

பெரும்பாலான பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதோடு, வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. அதேநேரம் சென்னையில் 5 சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் மழை பாதிப்புக்கு உள்ளான பகுதிகளிலும், பருவமழையை எதிர்கொள்ள எடுக்கப்பட்டு வரும் பணிகளையும் நேரில் ஆய்வு மேற்கொண்டார். முதலில் யானைக்கவுனி பகுதியில் நடைபெற்று மழை பரமாரிப்பு பணிகளை பார்வையிட்ட முதல்வர், தொடர்ந்து சென்னை பெரம்பூர் , புளியந்தோப்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். தாவ்ழான பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை உடனுக்குடன் அகற்ற வேண்டும் என அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

அப்போது மாநாகராட்சி களப்பணியாளர்களுக்கு உணவுப்பொருட்களை வழங்கிய அவர், ஆய்வுப்பணியை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்.

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள முதல்வர், “கொட்டும் மழை உள்ளிட்ட இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்ளத் தன்னலம் கருதாமல் – நேரம் காலம் பார்க்காமல் நம் துயர்துடைக்கக் களம் காண்பவர்கள் தூய்மைப் பணியாளர்கள், மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள்! அவர்களுடன் நானும் எப்போதும் முன்கள வீரனாகத் துணை நிற்பேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *