கோவை,
கோவை காரி மோட்டார் ஸ்பீட்வேயில் 2வது நாளான ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கார் பந்தய திருவிழாவில் ரேசிங் புரமோஷன்ஸ் நிறுவனத்தின் இந்திய ரேசிங் லீக் 4வது போட்டியில் ரவுல் ஹைமனின் கோவா ஏசஸ் அணி வெற்றி பெற்றது.
சனிக்கிழமையன்று நடந்த இந்திய ரேசிங் லீக்கின் முதல் பந்தயத்தில் அவரது அணி வீரர் சோஹில் ஷா விட்ட இடத்தை பின் தொடர்ந்து ஹைமன் இந்த போட்டியில் சிறப்பாக காரை ஓட்டி வெற்றி பெற்றார்.
ஹைமனுக்குப் பின்னால் இரண்டாவது இடத்தைப் ஷ்ராச்சி ரார் ராயல் பெங்கால் டைகர்ஸ் அணியின் ருஹான் அல்வாவும், டெல்லிக்கான ஸ்பீட் டெமான்ஸ் அணியின் போர்ச்சுகலின் அல்வாரோ பரன்டே மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.
தற்செயலாக, இறுதிக் கட்டத்தில் ஹைமனின் அணியைச் சேர்ந்த கேப்ரியேலா ஜில்கோவாவின் கார் பிரச்சினையை சந்தித்தது.
இதன் காரணமாக பரன்டே வெற்றி பெற்றார். மேலும் தவறான தொடக்கத்திற்காக ஜில்கோவாவிற்கு 20 வினாடிகள் அபராதம் விதிக்கப்பட்டது, இதன் காரணமாக அவர் ஏழாவது இடத்திற்கு தள்ளப்பட்டார்.
இந்த பந்தயம் முழுவதும் ஹைமன் சிறப்பாக விளையாடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். ஜில்கோவா தனது காரில் பிரச்சினையை எதிர்கொள்ளும் வரை உறுதியாக இருந்த அவரது வெற்றி வாய்ப்பு இறுதியில் கைநழுவிப் போனது.
இதனால் பரன்டே 3வது இடம் பிடித்தார். கிங்பிஷர் சோடா, ஜே.கே. டயர்ஸ், மொபில் 1 மற்றும் மேகா இன்ஜினியரிங் & இன்ப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் ஸ்பான்சர் செய்துள்ள இந்த 2 நாள் இந்திய பந்தய திருவிழா ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் பேன் கோட் ஆகிய இணையதளங்களில் நேரலையில் ஒளிபரப்பானது.
இந்த போட்டிகளின் ஐந்தாவது மற்றும் இறுதி சுற்று வரும் நவம்பர் மாதம் 16 மற்றும் 17-ந்தேதி கோவையில் நடைபெற உள்ளது.
இந்த வார இறுதியில் நடந்த பார்முலா 4 இந்திய ஓபன் சாம்பியன்ஷிப் போட்டியின் 3 பந்தயங்களிலும் பிளாக் பேர்ட்ஸ் ஐதராபாத்தைச் சேர்ந்த தென்னாப்பிரிக்காவின் அகில் அலிபாய் மற்றும் ஷ்ராச்சி ராயல் பெங்கால் டைகர்ஸ் அணியைச் சேர்ந்த ருஹான் அல்வா மற்றும் பெங்களூர் ஸ்பீட்ஸ்டர்ஸ் அணியின் ஜடன் பரியாட் ஆகிய மூன்று இளைஞர்களும் ஆதிக்கம் செலுத்தினர்.
இன்றைய இரண்டு போட்டி உட்பட மூன்று பந்தயங்களிலும் அலிபாய் வெற்றி பெற்றார். மூவரும் சிறப்பாக விளையாடி தங்கள் இடங்களை தக்க வைத்துக் கொண்டனர். மூன்று பந்தயங்களிலும் வெற்றி பெற்ற எனக்கு இந்த வார இறுதியானது மகிழ்ச்சிகரமாக அமைந்தது.
இறுதிச் சுற்றிலும் இதே நிலை தொடரும் என்று நான் நம்புகிறேன். இதேபோல் சிறப்பாக காரை ஓட்டி பட்டம் வெல்வேன் என்று என்று அலிபாய் தெரிவித்தார். இவர் ஏற்கனவே ஒரு போட்டியிலும் இந்த வார இறுதியில் 3 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, அலிபாய் தனது இரண்டாவது பந்தயத்தை ரிவர்ஸ் கிரிட்டில் தொடங்கிய போதிலும் முதலிடம் பிடித்தார்.
அதே சமயம் பரியாட் மற்றும் அல்வா இருவரும் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தைப் பிடித்தனர். 27வது ஜேகே டயர்-எப்எம்எஸ்சிஐ தேசிய பந்தய சாம்பியன்ஷிப் – பெங்களூரு ட்ரையோ அணி வெற்றி ,பெங்களூரைச் சேர்ந்த பந்தய வீரர்களான அபய் மோகன் (எம்ஸ்போர்ட்), சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற டிஜில் ராவ் (டார்க் டான் ரேசிங்) மற்றும் சேத்தன் சுரினேனி (அஹுரா ரேசிங்) ஆகியோர், போட்டி துவங்கியதில் இருந்து கடுமையாகப் போட்டியிட்டு எல்ஜிபி பார்முலா 4 பந்தயத்தில் அந்த வரிசையில் அவர்கள் இடங்களைத் தக்க வைத்துக் கொண்டனர்.
ரோஹன் ஆர் (கோவை) மற்றும் நவநீத் குமார் எஸ் (புதுச்சேரி) ஆகியோர் ராயல் என்பீல்டு கான்டினென்டல் ஜிடி கோப்பையில் கடுமையாக போராடி தலா ஒரு பந்தயத்தில் வெற்றி பெற்றனர்.
உண்மையில், இன்றைய முதல் பந்தயத்தில் வெற்றி பெற்ற பிறகு, ரோஹன் இரட்டைச் சதம் அடிக்கத் தயாராக இருந்தார், ஆனால் நவநீத் குமார், இரண்டாவது ஆட்டத்தில் அதிரடி காட்டி அவரை பின்னுக்கு தள்ளினார்.