சாதனை படைத்த சிம்புவின் ‘விண்ணைத் தாண்டி வருவாயா’!!

கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு- திரிஷா நடிப்பில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களை சொக்கவைத்த படம் விண்ணைத் தாண்டி வருவாயா. பின்னணியில் ஏஆர் ரகுமான் இசை, திரையில் கார்த்திக் – ஜெஸியின் காதல் ரசிகர்களைப் படம் வெளியாகி 14 ஆண்டுகள் கழித்தும் கட்டிப் போட்டுள்ளது.

காதலிப்பவர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய படங்களில் பட்டியலில் விண்ணைத் தாண்டி வருவாயா நிச்சயம் இருக்கும். அந்த வகையில் ஒவ்வொரு காதலர் தினத்தன்றும் இந்த படம் சிறப்பு திரையிடல் செய்யப்படும்.

குறிப்பாகச் சென்னை பிவிஆர் விஆர் (pvr vr mall) திரையில் ரீரிலீஸ் ஆகி இப்படம் இன்றுடன் 1000-வது நாளைக் நிறைவு செய்து சாதனை படைத்துள்ளது.

பிவிஆர் திரையில் கடந்த 142 வாரங்களாக [2.75 ஆண்டுகளாக] இப்படம் ஒரு காட்சியாவது திரையிடப்பட்டு வருகிறது. இந்திய அளவில் ரீரிலீசில் அதிக நாள்களைக் கடந்த திரைப்படம் என்ற சாதனையை தனதாகியுள்ளது விண்ணைத் தாண்டி வருவாயா.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *