ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் புதிய படம் “கூலி.” சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடந்து வந்தது.
படத்தில் ஏற்கனவே சத்யராஜ், நாக்ராஜுனா, சௌபின் ஷாஹிர், சுருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனிருத் இசையமைக்கும் இந்த படத்திற்கு கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார் . அன்பறிவ் சண்டைக் காட்சிகளை இயக்குகின்றனர்.
விசாகபட்டணத்தில் முதற்கட்ட படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில் அதை முடித்துக் கொண்டு சென்னை வந்து ஆஞ்சியோபிளாஸ்டி அறுவை சிகிச்சை செய்துகொண்டார் ரஜினிகாந்த். தற்போதுவரை அவர் ஓய்வெடுத்து வந்த நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அதன்படி இன்றுமுதல் சென்னையில் நடக்க உள்ள கூலி படப்பிடிப்பில் ரஜினிகாந்த் இணையுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.