நினைத்ததை நிறைவேற்றும் வாராகி மாலை அன்னை வடிவம்!!

எந்த ஒரு வழிபாடு செய்யும்போதும் அந்த தெய்வங்களுக்கு உரிய மிகவும் பிடித்த மந்திரப்பாடல்களை நம் நாவினால் பாடுகின்றபோது நாம் கேட்கும் பலன் தடையின்றி விரைவில் நமக்கு கிடைக்கின்றது.

ஒவ்வொரு இறைவனுக்கும் ஒவ்வொரு பாடல் பாடியே அவர்களை மகிழ்வித்தே நம் முன்னோர்கள் சித்தர்கள் கண்கொள்ளா காட்சி கண்டு முக்தி பெற்றனர்.

அதேபோலதான், நீங்கள் அன்னையின் வரலாறுகளை அவள் மகிமைகளை தெரிந்து கொண்ட பிறகு அவள் அருளை பெற உங்கள் மனம் துடிக்கின்றது என நான் அறிவேன்.

வாராகி அன்னைக்கு லட்சோப அதர்வன சித்திமந்திரம் இருந்தாலும், அவள் கூப்பிட்ட உடன் அகம் மகிழ்ந்து ஓடிவந்து நிற்பது ‘வாராகிமாலை’ எனும் அற்புத பாமாலைதான்.

இது பகை அல்லல் அகற்றும் பாமாலை, இந்த வாராகி மாலையை மாலை நேரத்தில் யார் பாடி அன்னையை வழிபடுகிறார்களோ அவர் நிச்சயம் வெற்றியாளீ ஞானியே, இந்த வாராகி மாலையில் 32 பாடல்கள் அடங்கி உள்ளது.

இந்த 32 பாடல்களும் ஒவ்வொரு நிலையிலும், நமக்கு மிகப்பெரிய சிறப்புகளையும், நல்ல வாழ்வையும் அளிக்கவல்லது.

வாராகி அருள்பெற இந்த வாராகி மாலை ஒன்றே போதுமானது.

அனைவரும் இதனை படித்து சகலபாக்கியங்களையும் பெற்று நிம்மதியாக வாழ வேண்டும். அதுவே அன்னை வாராகியின் இலக்கு.

வாராகி மாலை-அன்னை வடிவம்

இருகுழை கோமளம் தாள் புஷ்பராகம் இரண்டுகண்ணும்

குருமணி நீலம் கை கோமேதகம் நகர் கூர்வயிரம்

திருநகை முத்துக் கனிவாய் பவளம் சிறந்தவல்லி

மரகத நாமம் திருமேனியும் பச்சை மாணிக்கமே…

பொருள்: நவரத்தினம் அனைத்தும் அன்னைக்கு அவள் உடலுக்கு ஒப்பிட்டு கூறப்படுகிறது.

செவிகள் – குழை, திருவடிகள் – புஷ்பராகம், இரண்டு கண்கள் – நீலகல், கரங்கள் – கோமேதகம், நகம் – வைரம், சிரிப்பு – முத்து பவளம் போன்ற இதழ்.

திருமேனி உடலோ மரகதம், பச்சை மாணிக்கம் போல் ஒளிரும் மேனியுடையதாகும்.

பயன்படுத்தும் முறை :

அன்னையை வழிபடும்போது அவளை நம்மோடு இணைய விண்ணப்பம் செய்யும் முதல் பாடல்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *