தவெக மாநாட்டிற்காக 250 ஏக்கர் பரப்பளவில் 5 இடங்களில் பார்க்கிங் வசதிகள் செய்த நிலையில் காலை 11 மணிக்குள் பார்க்கிங் பகுதி முழுவதுமாக நிரம்பின.
அதேபோல் தவெக மாநாட்டு திடலில் 90% இருக்கைகள் நிரம்பின. தற்போதே சுமார் 1 லட்சம் தொண்டர்கள் மாநாட்டு திடலில் குவிந்துள்ளனர். தொண்டர்கள் குவிந்ததை அடுத்து மாநாட்டு நிகழ்ச்சியை முன்கூட்டியே தொடங்க தவெக தலைமை முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விக்கிரவாண்டி பகுதியில் வெயில் சுட்டெரிக்கும் நிலையில், தொண்டர்கள் தலையில் நாற்காலிகளை கவிழ்த்தபடி காத்திருக்கின்றன. மாநாட்டுக்கு காலை 9 மணி வரைக்கும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் வந்து சேர்ந்தனர்..11 மணியளவிலேயே பார்க்கிங் நிரம்பி விட்டன.
தவெக மாநாட்டில் தடுப்புகளை மீறி விஐபி இருக்கைகள், பெண்கள் இருக்கைகளில் அமர்ந்திருந்த தொண்டர்களை பவுன்சர்கள் வெளியேற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.