தென் ஆப்பிரிக்கா, இந்தியா இடையிலான 4வது டி20 போட்டி- பந்து தாக்கியதால் வலிதாங்க முடியாமல் அழுத ரசிகை.. மன்னிப்பு கேட்ட சஞ்சு சாம்சன்

தென் ஆப்பிரிக்கா, இந்தியா இடையிலான 4வது டி20 போட்டி ஜோகனஸ்பெர்கில் நடைபெற்றது.
முதலில் ஆடிய இந்தியா 20 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 283 ரன்களைக் குவித்தது. சஞ்சு சாம்சன் 109 ரன்னும், திலக் வர்மா 120 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர். அடுத்து ஆடிய தென் ஆப்பிரிக்கா 148 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இதன்மூலம் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரை 3-1 என கைப்பற்றி அசத்தியது.

இந்நிலையில், சர்வதேச டி 20 கிரிக்கெட்டில் ஒரே ஆண்டில் 3 சதமடித்த இந்திய வீரர் என்ற புதிய சாதனையை சஞ்சு சாம்சன் படைத்தார்.

இந்த டி20 போட்டியில் 10வது ஓவரில் சஞ்சு சாம்சன் அடித்த பந்து மைதானத்தில் இருந்த ஒரு பெண்ணின் கன்னத்தில் பலமாக தாக்கியது. இதனால் வலி தாங்க முடியாமல் அந்த பெண் கதறி அழுத வீடியோ இணையத்தில் வைரலானது.

தான் அடித்த பந்து மைதானத்தில் இருந்து பெண்ணை தாக்கியது தெரிந்ததும் உடனடியாக சஞ்சு சாம்சன் அப்பெண்ணிடம் மன்னிப்பு கோரினார் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *