தமிழகத்தில் யாருக்குமே பாதுகாப்பு இல்லை என்பது மீண்டும் நிரூபணம் ஆகியிருக்கிறது – சசிகலா குற்றச்சாட்டு!!

தஞ்சாவூரில் ஆசிரியர் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாக சசிகலா கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப் பட்டினத்தில் உள்ள அரசு பள்ளியில் பணியாற்றி வந்த ஆசிரியை ரமணி அவர்களை பள்ளியி லேயே கொடூரமாக கத்தியால் குத்தி கொலை செய்திருப்பது மிகவும் அதிர்ச்சியையும், வேதனை யையும் அளிக்கிறது.

இதன் மூலம் தமிழகத்தில் யாருக்குமே பாதுகாப்பு இல்லை என்பது மீண்டும் நிரூபணம் ஆகியிருக்கிறது.

திமுக தலைமையிலான விளம்பர ஆட்சியில் சட்டம் ஒழுங்கு எந்த அளவுக்கு மோசமாக இருக்கிறது என்பதை இச்சம்பவம் வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறது.

உயிரிழந்த ஆசிரியை ரமணியின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழகத்தில் சட்ட விரோத செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்த விளம்பர ஆட்சியில் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படாததால், யார் வேண்டுமானாலும் எதையும் செய்யலாம் என்ற அவல நிலை இருப்பது மிகவும் வேதனையளிக்கிறது.

இவ்வாறு குற்றச்செயல்கள் தொடர்ந்து நடைபெறுவதால் மாநிலத்தின் பாதுகாப்பே கேள்விக் குறியாகிறது.

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஆட்சிக்காலத்தில் அமைதி பூங்காவாக இருந்த தமிழகம் இன்றைக்கு ஏழை, எளிய, சாமானிய மக்கள் வாழ தகுதியற்ற, பாதுகாப்பற்ற ஒரு மாநிலமாக மாறி வருவது மிகுந்த வேதனையளிக்கிறது.

தமிழகத்தில் உள்ள இளம் வயதினர் தவறான பாதைகளுக்கு சென்று விடாமல் பார்த்துக் கொள்ளவேண்டியது ஒரு அரசின் தலையாய கடமையாகும்.

எனவே, திமுக தலைமையிலான அரசு கொஞ்சமாவது தமிழக மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, எஞ்சியிருக்கும் ஆட்சிக் காலத்திலாவது,தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை உடனே எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *