மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் குமார் நடித்து இருக்கும் திரைப்படம் விடாமுயற்சி. படத்தை குறித்த அப்டேட் நீண்ட காலமாக வெளிவராமல் இருந்தது.
இந்நிலையில் படத்தின் டீசரை யாரும் எதிர்ப்பார்த்திராத போது முன்னறிவிப்பு ஏதும் இல்லாமல் படக்குழு வெளியிட்டது.
டீசரின் காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இத்திரைப்படத்தை லைகா ப்ரொடக்ஷன் நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்நிலையில் லைகா ப்ரொடக்ஷன் தயாரிக்கும் அடுத்த திரைப்படத்தை குறித்த தகவல் தற்பொழுது லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இப்படத்தை நடிகர் விஜயின் மகனான ஜேசன் சஞ்சய் இயக்கவுள்ளார். படத்தின் நாயகனாக சுதீப் கிஷன் நடிக்கவுள்ளார்.
இதுக்குறித்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் பணம், கோர்ட் ரூம், வங்கி, போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது. படத்தின் இசையை தமன் இசையமைக்கவுள்ளார்.
படத்தொகுப்பை பிரவீன் கே.எல் மேற்கொள்ளவுள்ளார். இதன் வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.