சென்னை ;
‘குட் பேட் அக்லி’பட தயாரிப்பு நிறுவனத்திற்கு எதிராக இசையமைப்பாளர் இளையாராஜா வக்கீல் நோட்டீஸ் அனுப்பியது நியாயம் தான் என அவரது சகோதரர் கங்கை அமரன் தெரிவித்துள்ளார்.
நடிகர் அஜித் குமாரின் ‘குட் பேட் அக்லி’ படத் தயாரிப்பு நிறுவனத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா சார்பில் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. தான் இசையமைத்த 3 பாடல்களை அனுமதி இல்லாமல் பயன்படுத்தியதாக நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
ரூ.5 கோடி இழப்பீடு வேண்டும், இல்லையெனில் வழக்கு தொடரப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஒத்த ரூபாயும் தாரேன், என் ஜோடி மஞ்சள் குருவி, இளமை இதோ இதோ பாடல்களை பயன்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள்ளார். 3 பாடல்களையும் குட் பேட் அக்லி படத்தில் பயன்படுத்துவதை உடனே நிறுத்தவும், 7 நாட்களுக்குள் படக் குழு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கவும் இளையராஜா வலியுறுத்தியுள்ளார். இவரது இந்த நடவடிக்கைக்கு பலர் எதிர்ப்பும், ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், இளையராஜாவின் இந்த செயலுக்கு அவரது சகோதரர் கங்கை அமைரன் ஆதரவு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், 7 கோடி ரூபாய் கொடுத்து நீங்கள் படத்தில் இசையமைப்பாளர் ஒருவரை வைத்துள்ளீர்கள்.
ஆனால் அவர் இசையமைத்த பாடல்களுக்கு வரவேற்பு இல்லை. எங்க பாட்ட போட்ட உடனே விசில் பறக்குது.
அப்போ எங்களுக்கு கூலி வரணும்ல. பணத்தாசை எல்லாம் இல்லைங்க, பணம் எங்க கிட்ட கொட்டி கிடக்கு. இளையராஜாவிடம் இந்த பாடல்களை பயன்படுத்த வேண்டும் என்று அனுமதி ஆரம்பத்திலேயே கேட்டிருந்தால் அவர் இலவசமாகவே கொடுத்திருப்பார். ஆனால் அனுமதி கேட்காமல் பயன்படுத்தியதால் தான் அவர் கோபப்படுகிறார் என கூறினார்.