திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்த 7 பேரின் குடும்பத்திற்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலையில் மண்சரிவில் சிக்கிய 7 பேர் மீட்க கடுமையான போராட்டம் நடைபெற்றது. இருப்பினும் மண்சரிவில் சிக்கிய 7 பேரும் உயிரற்ற நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்த 7 பேரின் குடும்பத்திற்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், பாறை படைதிரட்டிவந்து உயிரெடுத்ததா? வீடே புதைகுழியாக மண்ணே மண்தள்ளியதா? கண்மூடிப் போகுமுன்னே மண்மூடிப் போன மாந்தர்க்கு மழையின் ஒப்பாரி செவிப்பட்டிருக்குமா? எரிப்பது ஆரியக் கலாசாரம் புதைப்பது தமிழர் கலாசாரம் தமிழ்க் கலாசாரத்தில் சடங்கு செய்ததற்காய் மண்ணே உன்னை மன்னிக்க முடியாது.
மனிதரிலும் கொடியது இயற்கை குழந்தைகளையும் குறிவைக்கிறதே! அய்யகோ! கிரிவலம் வரும் திருவண்ணாமலையில் மலை உங்களை வலம் வந்துவிட்டதே உங்களைக் குடித்த மழையும் உங்களை மூடிய மலையும் எங்கள் அஞ்சலிக் கண்ணீரில் மூழ்கட்டும் மக்காள் என குறிப்பிட்டுள்ளர்.