திருவண்ணாமலையில் நிலச்சரிவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலையும், வருத்தங்களையும் தெரிவித்துக்கொள்வதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இறங்கல் செய்தியில், ஃபெஞ்சல் புயலின் தாக்கத்தால், திருவண்ணாமலை தீப மலை அடிவார பகுதிகளில் நேற்று ஏற்பட்ட நிலச்சரிவில் , கவுதம், இனியா, மகா, வினோதினி, ரம்யா என 5 குழந்தைகள் மற்றும் ராஜ்குமார் – மீனா தம்பதி என மொத்தம் 7 பேர் மண்ணுக்குள் புதையுண்ட நிலையில்,அவர்கள் 7பேரும் தற்போது உயிரிழந்து மீட்கப்பட்டுள்ளதாக வந்த செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைகிறேன்.
அவர்கள் அனைவரும் உயிருடன் மீட்கப்படுவர் என்ற நம்பிக்கையுடன் இருந்த நிலையில் பேரிடியாக இப்படி ஒரு செய்தி வந்திருப்பது மிகுந்த துயரத்தை தருகிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.