உலக மக்கள் அனைவரும் மாற்றுத்திறனாளிகளின் பிரச்சனைகளைப் புரிந்து கொள் வதுடன், அவர்களுக்கு மேன்மையும், உரிமைகளும் வழங்கப்பட வேண்டும் என்ற நோக் கத்தால் ஐ.நா. சபை உலகம் முழுவதும் பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் நாள் என டிசம்பர் 3-ஐ அனுசரிக்கின்றது.
இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
அனைவரையும் உள்ளடக்கிய எதிர்காலத்துக்கு மாற்றுத்திறனாளிகளின் தலைமைத்து வத்தை ஊக்குவிக்க வேண்டும் என்பதை இந்த ஆண்டுக்கான உலக மாற்றுத்திறனாளிகள் நாள் கருப்பொருளாக ஐ.நா. அறிவித்துள்ளது!
அந்த வகையில், மாற்றுத்திறனாளர்களின் உரிமைகளையும் நலனையும் காப்பதுடன், அவர்கள் உயர்பதவிகளுக்குச் செல்ல வேண்டும், நல்ல வேலைவாய்ப்புகளைப் பெற வேண்டும் என்பதிலும் அக்கறை கொண்டு செயலாற்றி வருகிறது நமது திராவிட மாடல் அரசு.
சவால்களைக் கடந்து வெல்வது மாற்றுத்திறனாளிகளின் சாதனை; அந்தச் சவால்களைக் களைவதே நம் கடமை! என்று தெரிவித்துள்ளார்.