தமிழ்நாட்டு மக்கள் நலன் மற்றும் மாநில உரிமை காக்கின்ற வகையில் டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதில் மகிழ்ச்சி அடைகிறோம் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய போது, மதுரை அரிட்டாப்பட்டியில் டங்க்ஸ்டன் சுரங்கத்தை அமைக்க முயற்சிக்கும் ஒன்றிய அரசுக்கு எதிரான தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
“நான் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருக்கும் வரை, டங்க்ஸ்டன் சுரங்கத்தை ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன்” என்று மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மக்களின் குரலாக முழங்கினார்கள்.
தமிழ்நாட்டு மக்கள் நலன் மற்றும் மாநில உரிமை காக்கின்ற வகையில் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டதில் மகிழ்கிறோம். திராவிட மாடல் அரசு என்றும் மக்களின் பக்கமே நிற்கும் என குறிப்பிட்டுள்ளார்.