கடலூர் மாவட்டத்தில் புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
ஃபெஞ்சல் புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்த கனமழையால் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாகியுள்ளன.
குறிப்பாக விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளிலும் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஏராளமானோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், கடலூர் மாவட்டத்தில் புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், கடலூர் மாவட்டத்தில் வரலாறு காணாத கன மழையைத் தொடர்ந்து.
பாதிப்புக்குள்ளான பகுதிகளில் நேரில் ஆய்வு செய்து வருகிறோம். நெல்லிக்குப்பம் பிரதான சாலையை ஒட்டி உள்ள எஸ்.குமாரபுரம், கலைஞர் நகர் போன்ற தாழ்வான பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளதால், அதனை உடனே வெளியேற்றி இயல்பு நிலையை மீட்டெடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதன்பேரில், மோட்டார்கள் மூலம் வெள்ள நீரை வெளியேற்றும் பணியை விரைந்து மேற்கொள்ள அதிகாரிகளை இன்று அறிவுறுத்தினோம் என குறிப்பிட்டுள்ளார்.