உடல்நலக்குறைவால் முத்தமிழறிஞர் கலைஞரின் செயலாளர் ஏ.எம்.இராமன் மறைவு – முதலமைச்சர் நேரில் சென்று அஞ்சலி!!

சென்னையில் உடல்நலக்குறைவால் காலமான முத்தமிழறிஞர் கலைஞரின் செயலாளர் ஏ.எம்.இராமன், இ.ஆ.ப., (ஓய்வு) அவர்களின் இல்லத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அவரது உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

இது தொடர்பாக முதலமைச்சர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் செயலாளராகப் பணிபுரிந்த திரு. ஏ.எம். ராமன், இ.ஆ.ப. (ஓய்வு) அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன். ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநர், உயர்கல்வித்துறைச் செயலாளர்.

கோவை மாவட்ட ஆட்சியர் எனப் பல்வேறு பொறுப்புகளிலும் திறம்படப் பணியாற்றிய திரு. ராமன் அவர்கள் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது, அவரது செயலாளராக 1996 1999 வரை பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், அவருடன் பணிபுரிந்த அலுவலர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *