பாதிக்கப்பட்ட ஹிந்துக்களுக்காக போராடுவதற்கு கூட தமிழகத்தில் அனுமதி மறுக்கப்படுவது தொடர்கிறது என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீது தொடர் தாக்குதல் நடத்தி வரும் மத அடிப்படைவாதிகளுக்கு வங்கதேச அரசை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளோம்.
இதே தமிழகத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக மாதக்கணக்கில் அனுமதியின்றி போராட்டம் நடத்தியவர்கள் மீது எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்காத தமிழக காவல்துறை தான்.
வங்கதேசத்தில் பாதிக்கப்பட்ட ஹிந்துக்களுக்காக ஜனநாயக முறையில் ஆர்ப்பாட்டம் நடத்திய தேசபக்தர்களை இன்று கைது செய்திருக்கிறது.
தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமான PFI க்கு ஆதரவாக மனித சங்கிலி போராட்டம் நடத்தியவர்கள் மீது எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்காத தமிழக காவல்துறைதான்.
வங்கதேச ஹிந்துக்களுக்காக அறவழியில் போராட்டம் நடத்திய தேசாபிமானிகளை இன்று கைது செய்திருக்கிறது.
பாதிக்கப்பட்ட ஹிந்துக்களுக்காக போராடுவதற்கு கூட தமிழகத்தில் அனுமதி மறுக்கப்படுவது தொடர்கிறது. இந்த நிலை விரைவில் மாறும். ஒன்றுபட்ட ஹிந்து சக்தி வென்று தீரும் என குறிப்பிட்டுள்ளார்.