சென்னை மாநில கல்லூரி மாணவர்கள் தங்கி பயிலும் வகையில் ரூ.21.60 கோடி மதிப்பீட்டில் உயர்கல்வித்துறை சார்பில் கட்டப்பட்டுள்ள புதிய விடுதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இது தொடர்பாக துணை முதலமைச்சர் உதயநிதி வெளியிட்டுள்ள பதிவில், நம் #திராவிட_மாடல் அரசு சார்பில், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் உள்ள சென்னை மாநிலக் கல்லூரியில் வெவ்வேறு ஊர்களில் இருந்து வந்து பயிலும் 300-க்கும் மேற்பட்ட சிறப்பு மாணவ, மாணவியர்களின் நலன் கருதி, நவீன விடுதி வசதி ஏற்படுத்தித் தரப்படும் என்று மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜூலை 2022-ல் அறிவித்தார்கள்.
சிறப்பு மாணவர்களின் கல்விக்கு துணை நிற்கும் வகையிலான அந்த அறிவிப்பின் அடிப்படையில், ரூ.21.60 கோடி மதிப்பீட்டில் உயர்கல்வித்துறை சார்பில் கட்டப்பட்டுள்ள புதிய விடுதியை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இன்று திறந்து வைத்தார்கள்.
இச்சிறப்புக்குரிய நிகழ்வில் பங்கேற்றோம். நவீன வசதிகளுடன் கூடிய தங்கும் அறைகள், Study Hall, Canteen, கழிவறைகள், லிஃப்ட் வசதி – நடைமேடை போன்ற அம்சங்கள் இவ்விடுதியில் இடம்பெற்றுள்ளன. இவற்றை பயன்படுத்தி, கல்வியில் சாதனைப் படைத்திட நம் அன்புக்குரிய சிறப்பு மாணவ – மாணவியரை வாழ்த்தினோம் என குறிப்பிட்டுள்ளார்.