சென்னை தெற்கு மாவட்ட திமுக சார்பில், அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஏற்பாடு செய்துள்ள 1.5 லட்சம் கிலோ அரிசி ஏற்றிய வாகனங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் இருந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு அனுப்பி வைத்தார்.
இது தொடர்பாக திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் திமுக சார்பில் நிவாரணப் பொருட்களை அனுப்பி வைக்க அறிவுறுத்தியிருந்த நிலையில் அரியலூர் மாவட்டத்தின் சார்பில் மாண்புமிகு எஸ்.எஸ். சிவசங்கர் அவர்கள் 25,000 உணவுப் பொட்டலங் களை விக்கிரவாண்டி தொகுதியில் விநியோகித்துள்ளார். காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத்தின் சார்பில் மாண்புமிகு தா.மோ.அன்பரசன் அவர்கள் 1 லட்சம் கிலோ அரிசியை அனுப்பி வைத்துள்ளார்.
இந்த நிலையில், சென்னை தெற்கு மாவட்டத்தின் சார்பில் மாண்புமிகு மா.சுப்பிரமணியன் அவர்கள் ஏற்பாடு செய்துள்ள 1.5 லட்சம் கிலோ அரிசி ஏற்றிய வாகனங்களை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இருந்து பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு அனுப்பி வைத்தார்.