வங்கதேச இந்துக்களுக்கு எதிராக நடைபெரும் வன்முறையை கண்டித்து, சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் தமிழிசை செளந்தரராஜன் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை செளந்தரராஜன், “அரசாங்கம் மற்றவர்கள் மீது சேற்றை வீசியதால் மக்கள் அமைச்சர் பொன்முடி மீது வீசி இருக்கிறார்கள். ஆனால் பாஜகவினர்தான் சேற்றை வீசியதாக அவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
ஆனால் மக்கள் தான் பொன்முடி மீது சேற்றை வீசி இருக்கின்றனர். இதனை நாங்கள் அரசியலாக்க விரும்பவில்லை அனைவரும் களத்தில் இறங்கி மக்களுக்காக சேவை வேண்டும். விஜய் வீட்டில் உக்கார்ந்துட்டு நிவாரணம் கொடுப்பது தவறு. ரூ.16 கோடியில் கட்டப்பட்ட பாலம் காணவில்லை. லஞ்சம் தலை விரித்தாடுகிறது. சட்டம் ஒழுங்கு எங்கேயும் இல்லை.
உணவு கொடுக்கவில்லை என மக்கள் வீதிக்கு வந்து போராடுகிறார்கள். மக்களை பற்றி சிந்திக்காமல், நடு ராத்திரியில் அணையை திறந்துள்ளனர். எவ்வளவு மழை வந்தாலும் அரசு மக்களை பாதுகாக்க வேண்டும்.
மழை, வெள்ளத்தில் திமுக அரசு தோல்வி அடைந்த அரசாக உள்ளது. தமிழகத்தில் வெள்ளம் வந்தால் எந்தளவு எதிர்கொள்ள வேண்டுமென இன்னும் திட்டமிடவில்லை” என்றார்.