தமிழ்நாட்டில் எந்த மொழியையும் கற்றுக் கொள்ள திமுக தடையாக இருந்தது இல்லை – திருச்சி சிவா எம்பி பேச்சு!!

ராஜ்யசபாவில் நிர்மலா சீதாராமன் பேச்சை சுட்டிக்காட்டி பேசிய திமுக எம்பி திருச்சி சிவா, தமிழ்நாட்டில் எந்த மொழியையும் கற்றுக் கொள்ள திமுக தடையாக இருந்தது இல்லை. மொழி ஆதிக்கம் செலுத்துவதை தான் எதிர்த்து வருகிறோம் என்றார்.

நாடாளுமன்றத்தில் வங்கிகள் சட்ட திருத்தம் தொடர்பான மசோதா தொடர்பாக பேசிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாம் தமிழ்நாட்டில் படித்த போது இந்தி படிக்கவிடாமல் தடுத்துவிட்டனர் என குற்றம் சாட்டினார்.

இதற்கு லோக்சபாவில் திமுக எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் எங்களை வந்தேறிகள் என்று திமுகவினர் அழைத்ததாகவும் நிர்மலா சீதாராமன் ஆவேசமாக குற்றம்சாட்டினார்.

அப்போது பேசிய கனிமொழி எம்பி, தமிழ்நாட்டில் எந்த மொழியையும் யாரையும் கற்க விடாமல் நாங்கள் தடுத்தது இல்லை.

எங்களைப் பொறுத்தவரை இந்தி மொழித் திணிப்பை மட்டுமே நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம்.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழ்நாட்டில் படித்த போது பள்ளிக்கூடங்களில் கற்றவர்கள் ஏராளம். தமிழ்நாட்டில் யாரும் இந்தி கற்க முடியாது என்ற நிலை இதுவரை இருந்ததில்லை என்றார்.

இதனைத் தொடர்ந்து ராஜ்யசபாவில் திருச்சி சிவா எம்பி, இன்று நிர்மலா சீதாராமனுக்கு பதிலடி தந்தார். திருச்சி சிவா எம்பி பேசுகையில் தமிழ்நாட்டில் எந்த மொழியையும் கற்றுக் கொள்ள திமுக தடையாக இருந்தது இல்லை; இந்தி மொழி ஆதிக்கம் செலுத்துவதை தான் தமிழ்நாடும் திமுகவும் எதிர்க்கிறது என்றார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *