விஜய் கண்டிப்பாக அரசியலில் ஜெயிப்பார். அவரின் அரசியல் நகர்வு நல்லா இருக்கிறது என அவரது தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய், தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார். இவர் தலைமையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் மாபெரும் மாநாடு நடைபெற்றது.
இந்த மாநாட்டில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அக்கட்சியின் கொள்கை மற்றும் கோட்பாடுகளை அறிவித்தார். அத்துடன் தன்னுடன் கூட்டணிக்கு வருபவர்களுக்கு ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என அறிவித்தார்.
இதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன்னர் புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய தவெக தலைவர் விஜய், கூட்டணி அழுத்தம் காரணமாக திருமாவளவன் இந்த விழாவில் பங்கேற்கவில்லை என கூறினார்.
இந்த நிலையில், விஜய் கண்டிப்பாக அரசியலில் ஜெயிப்பார் என அவரது தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார். சென்னையில் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவரிடம் விஜயின் அரசியல் பயணம் தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், விஜய் கண்டிப்பாக அரசியலில் ஜெயிப்பார் என கூறினார். விஜயின் அரசியல் நகர்வு குறித்த கேள்விக்கு அரசியல் நகர்வு நல்லா இருக்கிறது என கூறினார்.