வருகின்ற டிசம்பர் 20ஆம் தேதி நடைபெறவுள்ள எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்க திட்டம் தொடர்பான கருத்துக் கேட்பு கூட்டத்தில் நானும் பங்கேற்கிறேன் – சீமான்!!

சென்னை: 

வருகின்ற டிசம்பர் 20ஆம் தேதி நடைபெறவுள்ள எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்க திட்டம் தொடர்பான கருத்துக் கேட்பு கூட்டத்தில் நானும் பங்கேற்கிறேன் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், வருகின்ற டிசம்பர் 20ஆம் தேதி, வெள்ளிக்கிழமை, நடைபெறவுள்ள எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்கத் திட்டம் (ETPS Expansion) தொடர்பான கருத்துக் கேட்பு கூட்டத்தில் நானும் நாம் தமிழர் கட்சியின் உறவுகளும் பங்கெடுக்க வருகிறோம்.

ஏற்கனவே பல்வேறு தொழிற்சாலைகளின் குவியலால் கடுமையான சுற்றுச்சூழல் பாதிப்புக்கு உள்ளாகி, நச்சுக்காற்று, புற்றுநோய் பாதிப்பு போன்ற பல்வேறு விளைவுகளால் வதைபட்டு வரும் வடசென்னை எண்ணூர் பகுதியில் மீண்டும் ஒரு அனல் மின் நிலைய விரிவாக்கத் திட்டம் முன்வைக்கப்படுவது தொடர்பானக் கருத்துக் கேட்புக் கூட்டமானது டிசம்பர் 20ஆம் தேதி, வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு, சென்னை எர்ணாவூர் மகாலட்சுமி நகரில், பெருந்தலைவர் காமராஜர் மாளிகையில் நடைபெறவுள்ளது.

நிலம், நீர், காற்று அனைத்தும் மாசுபட்டு ஒவ்வொரு நாளும் கடும் பாதிப்புகளை அனுபவித்து வரும் வடசென்னை எண்ணூர் பகுதி மக்களின் குரலாக நான் இக்கூட்டத்தில் பங்கேற்றுக் கருத்துக்களைப் பதிவு செய்ய உள்ளேன்.

இக்கருத்துகேட்புக் கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் திரளாகக் கலந்துக்கொண்டு கருத்தினைப் பதிவு செய்வதன் வழியே சூழலியல் பாதுகாப்பு மற்றும் மக்களாட்சி கடமைகளை ஆற்றிட அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *