சென்னை:
டங்க்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்யும் வரை போராட்ட கணலை அனையவிடாமல் பாதுகாத்து சுடர் கூட்டவேண்டியது நம் அனைவரின் பொறுப்பு என கூறினார்.
டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மதுரை எம்.பி சு.வெங்கடேசன் கலந்துகொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், இந்தியாவில் அரிய கனிமங்கள் 25 இடங்களில் ஏலம் விடப்பட்டதை யாரும் கேட்கவில்லை.
அதற்கு எதிராக போராட முன்வரவில்லை.நாம் தான் அதனை துணிச்சலோடு தட்டிக்கேட்கிறோம். எதிர்த்து நிற்கிறோம். மண்ணை காக்கிற போராட்டத்தில் நம்மிடம் பிரிவினை இல்லை என்பதை உரக்கச் சொல்லுகிறோம்.
இந்தியாவிலேயே முதல் கல்வெட்டு உள்ள மீனாட்சிபுரத்தை அழிக்க விட்டால் இந்த மண்ணில் வாழ்வதற்கு நாம் தகுதியான மனிதர்களா? என்று வரலாறு நம்மை கேள்வி கேட்கும்.
இந்த நாட்டின் வளங்கள் அனைத்தும் மக்களுக்குத்தானே தவிர வேதாந்தா போன்ற பெருமுதலாளிக ளுக்கு அல்ல.
டங்க்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்யும் வரை போராட்ட கணலை அனையவிடாமல் பாதுகாத்து சுடர்க் கூட்டவேண்டியது நம் அனைவரின் பொறுப்பு என கூறினார்.