விருதுநகர் ,
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் கருவறைக்குள் செல்ல முயன்ற இசையமைப்பாளர் இளையராஜா தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் இசையமைப்பாளர் இளையராஜாவின் இசை கச்சேரி நடைபெற்றது.
இதனை தொடர்ந்து இளையராஜா ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக சென்றார். கோவிலில் இசையமைப்பாளர் இளையராஜாவூக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து இளையராஜா சாமி தரிசனம் செய்வதற்காக கோவிலுக்குள் சென்றார். அவரை ஜீயர்கள் உள்ளே அழைத்துச் சென்றனர். ஜீயர்கள் கோயில் கருவரைக்குள் செல்லும் போது இளையராஜாவும் அவர்களுடன் கருவறைக்குள் செல்ல முற்பட்டார்.
இந்த நிலையில், ஜீயர்கள் இளையராஜாவை தடுத்து நிறுத்தி உள்ளே வர வேண்டாம் வெளியில் நின்று சாமி தரிசனம் செய்யுங்கள் என கூறினர்.
இதனையடுத்து கருவறைக்கு வெளியே சென்ற இளையராஜா அங்கிருந்து சாமி தரிசனம் செய்தார். கருவறைக்குள் செல்ல முயன்ற இசையமைப்பாளர் இளையராஜா தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.