சென்னை:
ஆதவ் அர்ஜுனா விளக்கம் கேட்பார் அதற்கு விளக்கம் கொடுத்து விசாரிக்கலாம் என்றுதான் இருந்தேன், ஆனால் அதற்கான வாய்ப்பை ஆதவ் அர்ஜுனா இழந்துவிட்டார் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்
கும்பகோணத்தில் நடைபெற்ற திருமண நிகழ்வில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், கடந்த 7 ஆண்டுகளாக திமுக கூட்டணியில் இருக்கிறோம். எந்தக் காரணத்தை முன்னிட்டும் இந்தக் கூட்டணியை விட்டு விலகமாட்டோம்.
திமுக கூட்டணியில் இருந்து எங்களைப் பிரிக்க சனாதன அமைப்புகள் முயற்சி செய்து வருகின்றன. அது நடக்காது. எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலிலும் திமுக கூட்டணியிலேயே போட்டியிடுவோம் என கூறினார்.
இதனை தொடர்ந்து ஆதவ் அர்ஜுனா குறித்து பேசிய திருமாவளவன், என் 35 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில் இதுவரை 2 பேர் மீது மட்டுமே ஒழுங்கு நடவடிக்கை எடுத்திருக்கிறேன், அதுவும் இடைநீக்கம் மட்டுமே.
ஆதவ் அர்ஜுனா விளக்கம் கேட்பார் அதற்கு விளக்கம் கொடுத்து விசாரிக்கலாம் என்றுதான் இருந்தேன். அதற்கான வாய்ப்பை தற்போது அவர் இழந்துவிட்டார்.