இனி அரசு மருத்துவமனைகளில் இதற்கு கட்டணம் உண்டு..!

சென்னை;
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசியதாவது , அரசு மருத்துவமனைகளில் கட்டண பிரிவுகள் தொடங்கப்படுவதற்கான காரணத்தை விளக்கியுள்ளார்.

அனைத்து மக்களுக்கும் மருத்துவ சேவைகள் கிடைக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம் என அவர் தெரிவித்துள்ளார்.

மருந்துகள், சிகிச்சை ஆகியவை எல்லோருக்கும் ஒன்றாகவே இருக்கும்; ஆனால் தனிமையான முறையில் அறையில் சிகிச்சை பெற விரும்புவோருக்கே கட்டணம் வசூலிக்கப்படும். இது பொதுவார்டுகளைத் தவிர தனிப்பட்ட வசதிகளை விரும்புவோருக்கான ஏற்பாடாகும்.

அரசு மருத்துவமனை என்றாலே காலம் காலமாக இலவசமாக சிகிச்சை பெரும் மருத்துவமனை என்று இருக்கும் நிலையில் தற்போது அரசு மருத்துவமனையிலும் கட்டண பிரிவு என்ற செய்தியால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கட்டண பிரிவில் எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படும் என்பது குறித்து தகவல் இன்னும் வெளியாகவில்லை.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *