சென்னை ;
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி கிறிஸ்தவ மக்கள் அனைவருக்கும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், அன்பான வார்த்தை களாலும், அன்பான வாழ்க்கையாலும், உலகை ஆட்கொண்ட அருள்நாதர் இயேசுபிரான் அவதரித்த நாளை கிறிஸ்துமஸ் பெருவிழாவாக கொண்டாடி மகிழும் அனைவருக்கும் எனது மனமார்ந்த கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்பின் திருவுருவமாகவும், ஒட்டுமொத்த கருணையின் மறுவடிவமாகவும், மக்கள் அனைவரிடத்திலும் அன்பு பாராட்டிய இயேசுபிரான் போதித்த அன்பு, எளிமை, கருணை போன்ற உயரிய நற்குணங்களை பின்பற்றி சகோதரத்துவத்துடனும், ஒற்றுமையாகவும் வாழ்ந்திட நாம் அனைவரும் இந்நாளில் உறுதியேற்போம்.
மக்களின் நல்வாழ்வுக்காகவே அவதரித்த இயேசுபிரானை கொண்டாடி மகிழும் இந்நாளில் மக்கள் அனைவரது வாழ்விலும் நலமும் வளமும் பெருகட்டும் என உலகெங்கிலும் வாழும் கிறிஸ்துவ பெருமக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது இதயம் நிறைந்த கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.