கோயம்புத்தூர்
அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் 10 நாட்கள் கெடுவிதித்தார். இதையடுத்து அதிமுக கட்சி பொறுப்புகளில் இருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்டார்.
இதையடுத்து, செங்கோட்டையன் நேற்று டெல்லி சென்றார். கோவிலுக்கு செல்வதாகவும், மன நிம்மதிக்காக ஹரித்வார் செல்வதாகவும் செய்தியாளர்களிடம் கூறிய செங்கோட்டையன் டெல்லி சென்றார்.
இந்நிலையில், டெல்லியில் இருந்து செங்கோட்டையன் இன்று தமிழகம் திரும்பினார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன் கூறுகையில்,
ஹரித்வார் செல்வதாக கூறினேன். அமித்ஷாவை சந்திக்க அனுமதி கிடைத்தது. டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து பேசினேன். அனைவரையும் ஒருங்கிணைக்க வேண்டும். கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்று பேசினேன்.
இன்றைய அரசியல் சூழ்நிலை பற்றிய கருத்துகள் அங்கு பரிமாறப்பட்டன. அதிமுக இயக்கம் வலுப்பெற வேண்டுமென கருத்துகளை முன்வைத்தேன். மக்கள் பணி, இயக்கம் வலிமைபெறவும் பணிகளை தொடர்ந்து ஆற்றுவேன் . இவ்வாறு அவர் கூறினார்.