கோவை :
கோவை மெட்ரோ ரயில் திட்டம் குறித்து மெட்ரோ ரயில் நிறுவன மேலாண்மை இயக்குனர் எம்.ஏ.சித்திக் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மக்கள் தொகை காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. போக்குவரத்து நெரிசலை குறைக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன.
அந்த வகையில் தமிழகத்தின் தலைநகரான சென்னையில் மெட்ரோ ரயில் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு, தற்போது 2ம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. சென்னைக்கு அடுத்தபடியாக கோவை, மதுரை உள்ளிட்ட நகரங்களிலும் மெட்ரோ ரயில் சேவையை தொடங்குவதற்கான கள ஆய்வு நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், கோவை மெட்ரோ ரயில் திட்டம் குறித்து மெட்ரோ ரயில் நிறுவன மேலாண்மை இயக்குனர் எம்.ஏ.சித்திக் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது; நிலம் எடுப்பதற்கு தேவையான பணிகளை செய்து வருகிறோம்.
கோவை மெட்ரோ ரயில் திட்டத்தில் 30 மீட்டருக்கு ஒரு தூண் இருக்கும். அவிநாசி மேம்பாலம் அறிவிப்பை மனதில் வைத்து திட்டமிடுவோம். வருங்காலத்தை மனதில் வைத்து அவிநாசி சாலையை ஒட்டி திட்டமிட்டுள்ளோம். மதுரை திருமங்கலம் முதல் ஒத்தக்கடை வரை 32 கிலோ மீட்டர் வரை மெட்ரோ பாதை அமைகிறது என கூறினார்.