தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், உண்மை, உழைப்பு, உயர்வு என்னும் குறிக்கோளை அடிப்படையாகக் கொண்டு தமிழ்நாட்டை ஆட்சி செய்த மனிதப் புனிதரும், மக்களை மட்டுமே நினைத்த மகத்தான மனிதரும், வாழ்ந்த போதும்; வாழ்ந்து மறைந்த போதும் வாழ்வு தரும் வள்ளலாக விளங்கிக் கொண்டிருப்பவரும் இதய தெய்வம் டாக்டர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் 37-ஆம் ஆண்டு நினைவு நாளில் அவரைப் போற்றி வணங்குகிறேன்.
கழகத்தில் தன்னலம் கருதாது உழைக்கும் தொண்டர்களுக்கு கட்சித் தலைவரை தேர்ந்தெடுக்கும் உரிமையை புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் வழங்கினார். தொண்டர்களுக்காக உருவாக்கப்பட்ட கழக சட்ட விதிகள் மாற்றப்பட்டு உரிமைகள் பறிக்கப்பட்டு இருக்கின்றன.
இதை மீட்டெடுத்து, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் எண்ணங்களை நிறைவேற்றுவோம் என அவரது நினைவு நாளில் உறுதி ஏற்போம் என குறிப்பிட்டுள்ளார்.