சென்னை​யில் காணும் பொங்​கலை​யொட்டி இன்று கூடு​தலாக 500 சிறப்பு பேருந்​துகள் !!

சென்னை:
சென்னை​யில் காணும் பொங்​கலை​யொட்டி இன்று கூடு​தலாக 500 சிறப்பு பேருந்​துகள் இயக்​கப்​படு​கின்றன.

இது தொடர்பாக மாநகர போக்கு​வரத்து கழகத்​தின் மேலாண் இயக்​குநர் வெளி​யிட்ட செய்திக்​குறிப்​பில் கூறியிருப்பதாவது: காணும் பொங்​கலை​யொட்டி சென்னை​யில் பொது​மக்கள் பொழுது​போக்​குக்காக பல்வேறு இடங்​களுக்கு சென்று வருவார்​கள்.

இதற்கு ஏதுவாக, மாநகர போக்கு​வரத்துக் கழகம் சார்​பில் வழக்​கமான பேருந்​துகளுடன் கூடு​தலாக 500 சிறப்பு பேருந்​துகள் இயக்​கப்​படும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதி​களில் மாமல்​லபுரம், கோவளம், எம்ஜிஎம், வண்டலூர் உயிரியல் பூங்கா, கிண்டி சிறுவர் விளை​யாட்டு பூங்கா, மெரினா கடற்கரை ஆகிய பகுதி​களுக்கு பல்வேறு வழித்​தடங்​களில் இருந்து சிறப்பு பேருந்​துகள் இயக்​கப்​படும்.

பயணிகளை பாது​காப்பாக பேருந்​துகளில் ஏற்றி, இறக்​க​வும் போக்கு​வரத்தை ஒழுங்​குபடுத்​தும் பணியிலும் சிறப்பு அலுவலர்​கள், பணியாளர்​கள், பரிசோதகர்கள் உள்ளிட்​டோர் நியமிக்​கப்​பட்​டுள்​ளனர்.

இவ்வாறு மாநகர போக்கு​வரத்துக் கழகத்​தின் மேலாண் இயக்​குநர் வெளி​யிட்ட செய்திக்​குறிப்​பில் கூறப்​பட்டுள்​ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *