கிலோ கணக்கில் நகைகளை அணிந்து கொண்டு சாமி தரிசனம் செய்த தொழிலதிபர்!!

திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் விஜயவாடாவைச் சேர்ந்த தொழிலதிபர் சாம்பசிவ ராவ் 3 கிலோ எடை கொண்ட தங்க நகைகளை அணிந்து கொண்டு அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

நினைத்தாலே முக்தி தரக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், விடுமுறை நாட்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்களும் திருவண்ணாமலைக்கு வருகை தந்து பல மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து அண்ணாமலையாரை தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் சினிமா பிரபலங்கள் அரசியல் பிரமுகர்கள் என அனைத்து தரப்பினரும் திருவண்ணாமலைக்கு வருகை தந்து அண்ணாமலையாரை தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் விஜயவாடாவை சேர்ந்த தொழிலதிபர் சாம்பசிவராவ் எப்பொழுதுமே கிலோ கணக்கில் நகைகளை அணிந்து கொண்டு வெளியில் செல்வது வழக்கம். இன்று திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு மூன்று கிலோ எடை கொண்ட தங்க செயின்கள், அனைத்து விரல்களிலும் மோதிரம், 15 க்கும் மேற்பட்ட தடிமனான பிரேஸ்லெட்டுகள் என அணிந்து கொண்டு சாமி தரிசனம் செய்வதற்காக வருகை தந்தார்.

கோவிலில் கூடியிருந்த பக்தர்கள் அவர் அணிந்திருந்த தங்க நகைகளை பார்த்து ஆச்சரியத்துடன் ரசித்தனர். தொழிலதிபர் சாம்பசிவராவ் துபாயில் ஹோட்டல் நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் திருவண்ணாமலை கோவிலில் உள்ள சம்பந்த கணேசர் மற்றும் அண்ணா மலையார் உண்ணாமலை அம்மனை தரிசனம் செய்து நவகிரக சன்னதியில் தீபம் ஏற்றி வழிபாடு செய்தார். கோவில் நிர்வாகம் சார்பில் அவருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

கிலோ கணக்கில் நகைகளை அணிந்து கொண்டு சாமி தரிசனம் செய்த தொழிலதிபரை திருக்கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *