பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானை பிரிவதாக அவரது மனைவி சாய்ரா பானு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அறிவித்து பரபரப்பு ஏற்படுத்தினார். ஏ.ஆர்.ரகுமானும் இதனை உறுதிப்படுத்தி வருத்தம் தெரிவித்திருந்தார்.
இதற்கிடையில் உடல் நலக்குறைவால் சாய்ரா பானு அமெரிக்காவில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அறுவை சிகிச்சை நடந்து முடிந்துள்ளது. தற்போது அவரது உடல்நிலை தேறி வருகிறார்.
தனக்கு ஆதரவு அளித்தோருக்கு சாய்ராபானு நன்றி தெரிவித்துள்ளார். கடினமான நேரத்தில் தளராத ஆதரவு தந்த தனது முன்னாள் கணவர் ஏ.ஆர்.ரகுமானுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.