மகா சிவராத்திரி: பிரதமர் மோடி, ராகுல் காந்தி வாழ்த்து!

சென்னை:

சிவ பெருமானுக்குரிய எட்டு முக்கியமான விரதங்களில் ஒன்று மகா சிவராத்திரி விரதம் ஆகும். இது சிவ பெருமானுக்கு விருப்பமான இரவாக கருதப்படுகிறது. நாடு முழுவதும் இந்நாளில் சிவனுக்கும், குல தெய்வ கோவில்களிலும் பூஜைகள் நடைபெறும்.

இந்நிலையில் மகா சிவராத்திரி விழாவுக்கு பிரதமர் மோடி மற்றும் மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பூஜை செய்யும் வீடியோவை வெளியிட்டு பதிவிட்டுள்ள பிரதமர் மோடி,

போலேநாத் இறைவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட புனித பண்டிகையான மகாசிவராத்திரியில் நாட்டு மக்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்.

இந்த தெய்வீக சந்தர்ப்பம் உங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியையும், செழிப்பையும், நல்ல ஆரோக்கியத்தையும் தருவதாகவும், மேலும் வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான உறுதியை வலுப்படுத்தவும் நாங்கள் விரும்புகிறோம். எங்கும் சிவனே! என்று பதிவிட்டுள்ளார்.

மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் பதவில், அனைவருக்கும் புனிதமான மகாசிவராத்திரி திருநாள் நல்வாழ்த்துக்கள்!.

சிவசக்தியின் ஆசிகள் உங்கள் அனைவருக்கும் எப்போதும் இருக்கட்டும். எங்கும் சிவன்! என்று தெரிவித்துள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *