நாகையில் ரூ.139.92 கோடி மதிப்பீட்டிலான 35 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!

நாகை;
நாகையில் ரூ.139.92 கோடி மதிப்பீட்டிலான 35 முடிவுற்ற திட்டப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “தொகுதி மறுசீரமைப்பு திமுகவின் தனிப்பட்ட பிரச்சனை அல்ல. தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு வரமுடியாது என்று சொன்னவர்கள் தயவு கூர்ந்து வரவேண்டும் என அழைப்பு விடுக்கிறேன்.

அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்பதில் அரசியலாக பார்க்காதீர்கள். இது நம்முடைய உரிமை. இவன் என்ன அழைப்பது, நாம் என்ன போவது என்று இதில் கௌரவம் பார்க்காதீர்கள்.

தமிழ்நாட்டு நலனை கருத்தில் கொண்டு வரும் 5 ஆம் தேதி நடைபெறும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் 40 கட்சி தலைவர்களும் பங்கேற்க வேண்டும். தொகுதி சீரமைப்பு மூலம் தமிழ்நாட்டின் மக்களவைத் தொகுதி எண்ணிக்கையை குறைக்க ஒன்றிய அரசு முயற்சிக்கிறது.

மும்மொழி கொள்கையை திணிக்க மத்திய அரசு முயற்சித்துவருகிறது. ரூபாய் நோட்டில் உள்ள இந்தி எழுத்துகளை அழிக்க வேண்டியதுதானே என சில அதிமேதாவிகள் கேள்வி எழுப்புகின்றனர்.

ரூபாய் நோட்டில் மொழி சமத்துவம் இருக்கும்போது நாங்கள் ஏன் நடுராத்திரியில் சுடுகாட்டுக்குப் போக வேண்டும்?” எனக் கேள்வி எழுப்பினார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *