”டைம் அவுட்டில் ஆட்டமிழந்த முதல் பாகிஸ்தான் வீரர்”…

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணி முதல் சுற்றிலேயே வெளியேறி அந்த நாட்டு ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. இதனையடுத்து பாகிஸ்தானில் உள்ளூர் போட்டி நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் பாகிஸ்தான் அணிக்காக விளையாடிய சவுத் ஷகீல் இந்த தொடரில் விளையாடினார். அவர் ஸ்டேட் பேங்க் ஆப் பாகிஸ்தான் அணிக்காக விளையாடினார்.

பிடிவி அணிக்கு எதிரான ஆட்டத்தின் போது சவுத் ஷகீல் களத்திற்கு வரவில்லை. மூன்று நிமிடங்கள் ஆகியும் சவுத் ஷகீல் களத்திற்கு வராததால் பிடிவி அணி கேப்டன் நடுவரிடம் அவுட் கேட்டார்.

இதையடுத்து நடுவர் சவுத் ஷகிலுக்கு அவுட் கொடுத்து விட்டார். இந்த நிலையில் போட்டியின் போது சவுத் ஷகீல் படுத்து தூங்கி விட்டதால் பேட்டிங் செய்ய அவரால் வர முடியவில்லை என்பது தற்போது தெரிய வந்திருக்கிறது.

இது ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது. இதன் மூலம் பாகிஸ்தான் கிரிக்கெட்டிலே முதல் முறையாக டைம்ட் டவுட் ஆன வீரர் என்ற மோசமான சாதனையை சவுத் ஷகீல் படைத்திருக்கிறார்.

பாகிஸ்தான் அணி தற்போது தொடர் தோல்விகளால் தடுமாறி வரும் நிலையில், சவுத் ஷகீல் களத்திற்கு வராமல் படுத்து தூங்கிய சம்பவம் பாகிஸ்தான் ரசிகர்களை கடுப்படைய செய்திருக்கிறது.

இந்த போட்டியில் முஹம்மது ஷாசாத் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

சவுத் ஷகீல் பேட்டிங் செய்ய வராமல் தூங்கியதால் அவருடைய அணி 205 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

ஒரு விக்கெட் விழுந்த பிறகு களத்திற்கு இரண்டு நிமிடத்திற்குள் புது பேட்ஸ்மேன் வந்து பேட்டிங் செய்ய தயாராகவில்லை என்றால் அவருக்கு டைம்ட் அவுட் என்ற முறையில் அவுட் வழங்கப்படும்.

கடந்த 2023 உலகக்கோப்பை போட்டியில் இலங்கை வீரர் மேத்யூஸ் இவ்வாறு ஆட்டம் இழந்தது குறிப்பிடத்தக்கது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *