”காதல் தோல்வி குறித்து முதல் முறையாக பகிர்ந்த குக் வித் கோமாளி”..!

சென்னை:
சூப்பர் சிங்கர் சீசன் 7 நிகழ்ச்சியில் பங்கேற்ற ஷிவாங்கியின் குரலுக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் இருந்த போதிலும், இவரால் வெற்றிபெற முடியாமல் போனது. இதை தொடர்ந்து விஜய் டிவியில் துவங்கப்பட்ட குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்டார்.

இவர் சாதாரணமாக பேசுவதே நகைச்சுவை உணர்வுடன் இருந்ததால் இவரை பலர் ரசிக்க துவங்கினர். அதே போல் இது காமெடி நிகழ்ச்சியாக இருந்தாலும், அடிக்கடி இவர் பாடும் பாடல்கள் இவருக்குள் இருந்த பாடகியை வெளியே காட்டியது.

மூன்று சீசன்கள் ஷிவாங்கி கோமாளியாக இருந்தாலும், 4-ஆவது சீசனில் பிரத்தேயகமாக சமையல் பயிற்சிகள் எடுத்து, குக்காக மாறி அதிர்ச்சி கொடுத்தார். குறிப்பாக ஃபைனல் வரை அணைத்து போட்டியாளர்களுக்கு செம்ம டஃப் கொடுத்த ஷிவாங்கி 3-ஆவது இடத்தை பிடித்தார்.

இந்நிலையில் ஷிவாங்கி முதல் முறையாக தன்னுடைய காதல் அனுபவம் குறித்து காதல் தோல்வி குறித்தும் பகிர்ந்துகொண்டுள்ளார். இதுபற்றி பேசும் போது, “நானும் ஒருவரை உருகி உருகி காதலித்தேன்.

அதே போல் என் அப்பா – அம்மா இருவருமே காதலுக்கு எதிரி கிடையாது. அவர்களிடம் எனக்கு மாப்பிள்ளை பார்க்க கூடாது என கூறி, காதலித்து தான் திருமணம் செய்ய வேண்டும் என்பதிலும் உறுதியாக இருக்கிறேன்.

என்னை ஒருவர் காதலித்தார். நானும் அவரை உருகி உருகி காதலிக்க தொடங்கினேன். என்ன அவருக்கு இந்த காதலில் விருப்பம் இல்லாமல் போனது. அதற்காக என்னை காதலித்தவர் மீது நான் குறை சொல்லவில்லை.

அவருக்கு என்னை பிடிக்காமல் கூட போயிருக்கலாம். என முதல் குறையாக பர்சனல் பற்றி ஷிவாங்கி ஓப்பனாக ஏசியுள்ளார்.

எந்த ஒரு கள்ளக்கப்படமும் இன்றி பேசும் குணமுடைய ஷிவாங்கிக்கு இப்படி ஒரு காதல் தோல்வி இருப்பது, ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

ரசிகர்களும் நீங்கள் கவலை படாதீர்கள் இவரை விட ஒரு சிறந்த காதலர் உங்களுக்கு கணவராக கிடைப்பார் என கூறி வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *