கோவை ;
கோவை நீலாம்பூரில் உள்ள ராயல் கேர் நர்சிங் கல்லூரியில் நைட்டிங்கேல் அம்மையார் நினைவு கூறும் வகையில் விளக்கேற்றும் விழா மற்றும் உறுதி மொழி ஏற்பு விழா கல்லூரி வளாகத்தில் சமீபத்தில் சிறப்பாக நடைபெற்றது . மேலும் வரவேற்பு உரையுடன் தொடங்கிய விழாவில்

ராயல் கேர் மருத்துவமனை தலைவர் மற்றும் ராயல் கேர் நர்சிங் கல்லூரியின் நிர்வாக அறங்காவலர் டாக்டர் க . மாதேஸ்வரன் அவர்கள் தலைமை வகித்தார், மேலும் மாணவ மாணவியர்களுக்கு செவிலியர் முக்கியத்துவம் பற்றி உரையாற்றினார் .

டாக்டர் திருமதி ம். கௌரி குடும்ப நல துணை இயக்குனர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவ மாணவிகளை சிறப்பாக பணி செய்யுமாறு வாழ்த்தினார்.

விளக்கேற்றுவது மாணவர்களிடையியே செவிலிய அறிவு, திறன் மற்றும் பணியின் ஆத்மார்த்தமான மனப்பான்மை பரிமாற்றத்தை குறிக்கிறது .
மேலும் பி.எஸ்.சி நர்சிங் மற்றும் டி.ஜி. என் .எம் முதலாம் ஆண்டு மாணவ- மாணவிகள் நைட்டிங்கேல் உறுதி மொழி ஏற்றனர் . நன்றி உரையோடு நிகழ்ச்சி நிறைவுற்றது.