பாஜக சார்பில் போராட்டம் நடத்த தடை விதித்து தடுப்புக் காவலில் கைது செய்யும் ஊழல் திமுக அரசின் நடவடிக்கை வன்மையாக கண்டிக்கத்தக்கது – ஹெச்.ராஜா

சென்னை;
தமிழகத்தில் நடப்பது மக்களுக்கான ஆட்சியா? மதுபான கொள்முதல் ஊழல் மாஃபியாக்களுக்கான ஆட்சியா? என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தனது எக்ஸ் தளத்தில், “தமிழகத்தில் நடப்பது மக்களுக்கான ஆட்சியா? மதுபான கொள்முதல் ஊழல் மாஃபியாக்களுக்கான ஆட்சியா? டாஸ்மாக் மதுபான ஊழலை கண்டித்து நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்க பாஜகவினருக்கு தடை விதித்து தடுப்புக் காவலில் கைது செய்வது திராவிட மாடல் அரசு மக்களை விட மதுபான விற்பனைக்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் அளிக்கிறது என்பதை வெளிப்படுத்துகிறது. தமிழக காவல்துறையின் இந்த கைது நடவடிக்கை வன்மையாக கண்டிக்கத்தக்கது.

மதுபான கொள்முதலில் ஆயிரம் கோடிக்கு மேல் ஊழல் நடைபெற்று இருப்பதாக அமலாக்கத்துறை சோதனையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் திமுக அரசின் மதுபான கொள்முதல் ஊழலை கண்டித்து பாஜக சார்பில் போராட்டம் நடத்த தடை விதித்து தடுப்புக் காவலில் கைது செய்யும் ஊழல் திமுக அரசின் நடவடிக்கை வன்மையாக கண்டிக்கத்தக்கது.

டாஸ்மாக் ஊழலை கண்டித்து பாஜக சார்பில் நடைபெற உள்ள முற்றுகை போராட்டத்தில் கலந்து கொள்ள புறப்பட்ட தமிழக பாஜக மாநில செயலாளர் திரு. வினோஜ் பி செல்வம் வீட்டிற்கு சென்று தடுப்புக் காவலில் கைது செய்துள்ளது தமிழக காவல்துறை.

மேலும் தமிழக பாஜகவின் முன்னாள் மாநில தலைவரும், முன்னாள் ஆளுநருமான திருமதி. தமிழிசை செளந்தரராஜன் அவர்களை வீட்டுக்காவலில் வைத்திருக்கிறது தமிழக காவல்துறை.

சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் சமூக விரோதிகள் சர்வ சாதாரணமாக நடமாடும் தமிழகத்தில் மக்கள் பிரச்சனைகளுக்காக போராடும் பாஜக நிர்வாகிகளை மட்டும் திட்டமிட்டு கைது செய்யும் தமிழக காவல்துறையின் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது.” என பதிவிட்டுள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *