டாஸ்மாக்கிற்கு எதிராக யார் குரல் கொடுத்தாலும் வரவேற்போம் என விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
தமிழகத்தில் டாஸ்மாக் பார்களை ஒதுக்கீடு செய்வது, வாகனங்களுக்கான டெண்டர், பாட்டில் கொள்முதல் உள்ளிட்டவற்றில் ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு முறையீடு நடந்துள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்தது.
இதனை கண்டித்து இன்று பாரதிய ஜனதா கட்சி அறிவித்த போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்த நிலையில், பாஜக தலைவர்கள் வீட்டிலிருந்து செல்வதற்கு முன்பே காவல்துறையால் கைது செய்யப்பட்டனர்.
திமுக அரசுக்கு எதிராக டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட தொண்டர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.
சென்னையில் பாஜக முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, வினோஜ் பி செல்வம், ஹெச்.ராஜா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் பாஜகவின் போராட்டத்திற்கு திருமாவளவன் வரவேற்பு தெரிவித்துள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், “டாஸ்மாக் கடைகளை முற்றுகையிடும் பாஜகவின் போராட்டம் வரவேற்கதக்கது.
டாஸ்மாக்கிற்கு எதிராக யார் குரல் கொடுத்தாலும் வரவேற்போம் பாஜக ஆளும் மாநிலங்களில் மது ஒழிப்பை அமல்படுத்தினால் வரவேற்கலாம், பாராட்டலாம் மதுபான கடைகளை ஒழிக்க வேண்டும், மூடப்பட வேண்டும் என்பதுதான் எங்களது நிலைப்பாடு” எனக் கூறியுள்ளார்.