”மீண்டும் அதே ஐஏஎஸ் கதாப்பாத்திரத்தில் நீண்ட இடைவேளைக்கு பிறகு நடிக்கும் லேடி சூப்பர்ஸ்டார் விஜயசாந்தி”!!

சென்னை;

தெலுங்கு திரைப்படமான Arjun S/O Vyjayanthi படத்தின் டீசரை படக்குழு தற்பொழுது வெளியிட்டுள்ளது.

இப்படத்தில் விஜயசாந்தி மற்றும் கல்யாண் ராம் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். விஜயசாந்தி ஒரு நேர்மையான காவல் அதிகாரி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

அவரது மகனாக கல்யாண் ராம் தன் வழியிலேயே ஒரு நல்ல காவல் அதிகாரியாக வருவார் என எதிர்பார்க்கும் விஜயசாந்தி ஆனால் அதற்கு நேர் மாறாக மகனான கல்யாண் ராம் ஒரு கேங்ஸ்டராக உருவெடுக்கிறார். ஆனால் தன் தாயின் மீது அன்பாக இருக்கிறார்.

இந்த நேர் எதிர் சிந்தனையுடைய இருவரும் மோதும் காட்சிகள் டீசரில் இடம் பெற்றுள்ளது.

இப்படத்தை பிரதீப் இயக்கியுள்ளார். ஐபிஎஸ் கதாப்பாத்திரத்திற்கே பேர் போனவர் விஜய்சாந்தி மீண்டும் அதே ஐஏஎஸ் கதாப்பாத்திரத்தில் நீண்ட இடைவேளைக்கு பிறகு நடிக்கும் திரைப்படமாக இப்படம் அமைந்துள்ளது.

திரைப்படத்தை அசோகா கிரியேஷன்ஸ் மற்றும் NTR Arts நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.

இசையை அஜனீஷ் லோக்னாத் மேற்கொள்ள ஒளிப்பதிவை ராம் பிரசாத் செய்கிறார். திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. டீசர் காட்சிகள் படத்தின் எதிர்ப்பார்ப்பை அதிகரித்துள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *