சர்வதேச விண்வெளி நிலையத்தில் கடந்த 286 நாட்களாக தங்கியிருந்த சுனிதா வில்லியம்ஸ், பத்திரமாக பூமிக்குத் திரும்பினார்!!

சென்னை;
சர்வதேச விண்வெளி நிலையத்தில் கடந்த 286 நாட்களாக தங்கியிருந்த சுனிதா வில்லியம்ஸ், பத்திரமாக பூமிக்குத் திரும்பினார். இந்திய நேரப்படி சுமார் 3.30 மணிக்கு அவர் பயணித்த ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் விண்கலம், புளோரிடா மாகாணத்திற்கு அருகில் கடலில் இறங்கி மிதந்தது.

அமெரிக்காவின் டெக்சாஸின் ஹூஸ்டனில் வசித்துவருபவர் சுனிதா வில்லியம்ஸ். இவரது கணவர் மைக்கேல் ஜே வில்லியம்ஸ். சுனிதா வில்லியம்ஸின் சொத்து மதிப்பு சுமார் 5 மில்லியன் டாலர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

2024 ஜூன் 5 முதல் சுனிதா வில்லியம்ஸும், புட்ச் வில்மோரும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) தங்கியுள்ளனர்.

இருவரும் பயணம் செய்த போயிங் ஸ்டார்லைனர் விண்வெளி ஓடத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால், பூமி திரும்ப 9 மாதங்களுக்கு மேல் தாமதம் ஏற்பட்டுள்ளது.

சுனிதாவையும், புட்சையும் திரும்ப அழைத்து வருவதற்காக நாசா, ஸ்பேஸ்எக்ஸ் உடன் இணைந்து ஏவிய க்ரூ டிராகன் காப்ஸ்யூல் நேற்று விண்வெளி நிலையத்திற்கு சென்றது.

இந்நிலையில் சர்வதேச விண்வெளி நிலையத்தில் கடந்த 286 நாட்களாக தங்கியிருந்த சுனிதா வில்லியம்ஸ், பத்திரமாக பூமிக்குத் திரும்பினார்.

இந்திய நேரப்படி சுமார் 3.30 மணிக்கு அவர் பயணித்த ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் விண்கலம், புளோரிடா மாகாணத்திற்கு அருகில் கடலில் இறங்கி மிதந்தது. அவரை வீரர்கள் பத்திரமாக வெளியேற்றினர்.

பூமிக்கு வந்த மகிழ்ச்சியை கை அசைத்து வெளிப்படுத்தினார் சுனிதா வில்லியம்ஸ்.

2003-ம் ஆண்டும் இதேபோல கல்பனா சாவ்லா விண்வெளிக்குப் பயணப்பட்டார். ஆனால் கல்பனா சாவ்லாவின் இறுதிப் பயணம் அதுவாகவே இருக்கும் என யாரும் நினைக்கவும் இல்லை..

விண்வெளியில் இருந்து பூமிக்கு திரும்பிக் கொண்டிருந்தது கல்பனாவின் விண்கலம்.. பூமியை தொட்டுவிடும் தொலைவில் வந்த நிலையில் திடீரென அந்த விண்கலம் வெடித்துச் சிதறியது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *